பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி

0
32

பாடசாலை மாணவர்கள் பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபரொருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 70 வயதுடைய படதூவ பகுதியில் வசித்து வரும் வர்த்தகர் ஒருவராவார்.

பாடசாலை மாணவர்கள் பலருக்கு பல்வேறு வகையான உணவுகள் மற்றும் பானங்களை கொடுத்து இவ்வாறு வர்ததக நிலையத்திற்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவர்கள் பட்டம் விடும் சந்தர்ப்பங்களில் அவர்களை காய்கறி தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றும் இவ்வாறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.