பார்முலா 1: ரஷியா கிராண்ட் பிரீயில் வால்டெரி போட்டாஸ் வெற்றி

0
5

பார்முலா 1 கார் பந்தயத்தின் ரஷியா கிராண்ட் பிரீயில் வால்டெரி போட்டாஸ் வெற்றி பெற்ற நிலையில், லீவிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையே பெற்றார்.

பார்முலா 1 கார் பந்தயத்தின் 10-வது சுற்றான ரஷியா கிராண்ட் பிரீ இன்று நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் முதல் இடம் பிடித்தார். ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் 7.729 வினாடிகள் பின்தங்கி 2-வது இடம் பிடித்தார்.
மற்றொரு மெர்சிடெஸ் வீரரும், நட்டசத்திர வீரருமான லீவிஸ் ஹாமில்டன் 22.729 வினாடிகளில் பின்தங்கி 3-வது இடம் பிடித்தார்.