பாலியல் புகார் கூறிய கணவருடன் மீண்டும் இணைந்த கவர்ச்சி நடிகை

0
4

திருமணமான 2 வாரங்களில் பாலியல் புகார் கூறி கணவரை பிரிந்த கவர்ச்சி நடிகை மீண்டும் அவருடன் இணைந்து இருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.

கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் புகார் அளித்த சில தினங்களிலேயே தனது கணவருடன் மீண்டும் சமாதானம் ஆகிவிட்டார் பூனம் பாண்டே.
“நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் வெறித்தனமாக நேசிக்கிறோம். எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டன. எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது” என தனது கணவருடன் சேர்ந்தது குறித்து பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.