பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்த தினம்- 8-9-1933

0
7

பாலிவுட்டில் பின்னணி பாடகியாக மிகவும் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார்

 

பாலிவுட்டில் பின்னணி பாடகியாக மிகவும் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு இதே தேதியில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லி மாவட்டதிலுள்ள கோர் எனப்படும் குக்கிராமத்தில் பிறந்தார். மராட்டிய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஒரு திரையரங்கு நடிகர் மற்றும் சாஸ்த்ரீய சங்கீதா வித்வானாவார்.

1943 ஆம் ஆண்டு பாடகியாக அறிமுகமான இவர் கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கிறார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவரது பாடல்களுக்கென்றே இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இவர் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.

திரைப்பட பாடல்கள், போப் இசை, கஜல், பஜனைப் பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப் பாடல்கள், கவ்வாலி பாடல்கள், ரபீந்திர சங்கிரம் மற்றும் நஜ்ருல் கிதி பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர். இந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, தமிழ் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.