பிறந்த நாளில் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்ட 13 வயது தென்னாபிரிக்க சிறுமி – கைதான 34 வயது தழிழன்…

0
9

ரூசா என்ற 13 வயது சிறுமி, வீட்டாருடன் பிரச்சனைப் பட்டுக்கொண்டு வெளியே வந்த வேளை. அவருடம் நைசாகப் பேசி தனது டொயாட்டோ காரில் ஏற்றியுள்ளார் 34 வயதான சீலன். அவரை 100 மைல்களுக்கு அப்பால் கொண்டு போய். ஒரு வீட்டில் வைத்து மீண்டும் மீண்டும் கற்பழித்துள்ளார். அத்தோடு அன்றைய தினம் ரூசாவின் பிறந்த நாள் ஆகும். ஆம் உன்னை பிறந்த நாளில் நான் பாழாக்குகிறேன் பார் என்று கூறியபடியே அச்சிறுமையை அவர் கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இதேவேளை வீட்டில் சிறிய தகராறு காரணமாக அவர் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார் என்று உணர்ந்த மறுகணமே பெற்றோர் ரூசாவை தேட ஆரம்பித்தார்கள். அவர் ஒரு வெள்ளை நிற காரில் சென்றதாக அயலவர்கள் சொல்லவே. தனியார் பாதுகாப்பு பிரிவை வைத்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் ரூசாவின் குடும்பத்தினர். 10 மணி நேரத்தில் சீலன் சிவானந்தனை பொலிஸ் பிரிவோடு சேர்ந்து தனியார் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் உள்ள ரிச்சாட்-பே என்னும் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த தமிழர் தென்னாபிரிக்காவை சேர்ந்தவரா இல்லை வெளி நாடு செல்ல என தென்னாபிரிக்கா வந்து தங்கி இருந்தவரா என்பது தெரியவில்லை.