புகையிரத போக்குவரத்து சேவையிலிருந்து விலக தீர்மானம்

0
23

சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்து போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்துகளின் வேக தடுப்பில் நிலவும் குறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.