புதுமணத் தம்பதிகளுக்கு கொரோனா

0
5

மாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில், மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணமக்களும் அடங்குகின்றனர்.

குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருமண வைபவம் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்றுள்ள போதும், இரண்டாவது நாள் மணமகனின் வீட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில் சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை என மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணி புரிபவர் எனவும் குறித்த திருமண வைபவத்திற்கு கொழும்பில் இருந்தும் சிலர் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.