புதுமனை புகும்போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்துச் செல்வது ஏன்? ஆன்மிக அறிவியலின் உண்மை இதோ

0
10

பசுவின் கோ மாதாவாக நாம் வணங்கி வருகிறோம். பசுவின் உடலில் தெய்வங்களும், தேவ தேவதைகள் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக சொல்கிறது வேதம்.

பசுவிலிருந்து பெறப்படும் பொருட்களான பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் சேர்ந்த கலவையை பஞ்சகவ்யம் எனப்படுகிறது. இது அபிஷேகத்துக்கும், விவசாயத்திற்குப் பயன்படுவதோடு, மருந்தாகவும் செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

குளம்படிப்பட்ட தூசி நமது உடலில் பற்றிக் கொண்டால் நாம் நீராடிய தூய்மை உண்டாகும். நன்றாக மேய்ந்து வீடு திரும்பக் கூடிய பசுமாடுகளின் குளம்படி பட்டு கிளம்பக் கூடிய தூசி கிளம்பக் கூடிய வேளையை நல்ல வேளையாக பார்க்கப்படும் (கோதூளி லக்னம்) என முகூர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடக்கூடிய சாணத்தை உருண்டையாக்கி அதை நன்றாக காயவைத்து, உமியில் மூடி புடம் போட்டு எடுக்கப்படும் போது திருநீறு எனும் உன்னதமான மந்திர மருந்துப் பொருள் உருவாகிறது.

நாம் தினமும் அந்த திருநீறை அணிந்து வர பல தோஷங்கள் நிவர்த்தியாவதோடு, பயம் நீங்கும். திருநீறு அணிந்து மந்திரத்தை உச்சரிப்பதால் பலன்கள் அதிகரிக்கும்.

நீராடியதும் நாம் திருநீற்றை அணிந்து கொண்டால் உடலும், மனமும் முழு தூய்மையாகும் என்கிறது சாஸ்திரம்.

தான, தர்மங்கள் பல வகையாக கொடுக்கப்படுகின்றது. அதில் பசு தானம் செய்பவருக்கு தான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறது தர்மசாஸ்திரம்.

பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்ற பெயர் வந்தது.

பசுவின் பாதம் பட்ட இடம் பரிசுத்தமாகும் என்பதால் தான் புதுமனை புகுவிழாவில் பசுவும் கன்று குட்டியும் முதலில் அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால் புதுமனையில் இருக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நீங்கி தூய்மை உண்டாகும்.

பசுவை வெறும் கால்நடையாக பார்ப்பதை விடுத்து, அதனுள் ஒட்டுமொத்த தெய்வங்கள், தேவ, தேவதைகள் அடங்கியிருப்பதை உணர வேண்டும்.

பசுமாடு புதுவீட்டில் அழைத்துச் செல்வதால் மகிழ்ச்சி வரமாக அமையக் கூடும்.