காலி – அஹங்கம பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குகள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்றிருக்கும் இச்சம்பவத்தின்போது பதிவாகிய காணொளி தற்சமயம் வைரலாகப் பரவிவருகின்றது.
விசாரணைக்காக பிக்கு ஒருவர் உள்ளே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்திவருகின்ற வகையிலும், அதனை காணொளி பதிவுசெய்த பிக்குகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதையும் காணொளியில் காணமுடிகின்றது.