புரட்டாசி மாத ராசி பலன்கள் 2020

0
32

மிகவும் புனிதமான மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.

இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.

இதன்படி புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என பார்ப்போம்.

மேஷம்

நினைத்ததை நிறைவேற்ற வல்ல திறன் படைத்த மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் மாத முற்பகுதியில் உங்கள் ராசியில் வக்கிரமாகவும், மாத பிற்பகுதியில் விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வீண் கோபத்தை தவிர்க்கவும். பொறுமை, நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இருப்பினும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பொருளாதார நிலை உயரும். உடன் பிறப்புகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மனோபலத்தால் எதையும் சாதிக்க இயலும் என்பதை உணருவீர்கள். தாய் வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் உடல் நலனில் அதிக அக்கறை தேவை. குழந்தைகளின் பிரச்னை எதுவாக இருந்தாலும் பொறுமையுடன் கையாண்டு அன்போடு அரவணைத்து செல்லுங்கள்.

எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் புரிந்துணர்வு ஏற்படும். அன்னியோன்யம் அதிகரிக்கும். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார். தெய்வ அனுகூலமும், மூத்தோர் உதவியும் கிடைக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். மாத பிற்பகுதியில் நிலையற்ற தன்மை மாறி சிறிது, சிறிதாக வளர்ச்சி கூடும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மாத பிற்பகுதியில் பேச்சில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 18, 19, 20, 26, 27, 28, 29, 30. அக் 15, 16.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 21, 22, 23.

ரிஷபம்

பண்பிற்கும், பாசத்திற்கு மட்டும் தலைவணங்கும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் மனம் தெளிவு பெறும். மனோ தைரியம் உண்டாகும். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.

நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் சிறிது, சிறிதாக விலகும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

பொருளாதார நிலையில் இருந்த தடைகள் நீங்கி உயர்வு ஏற்படும். இருப்பினும் வீண் மனக்கவலையை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ளுங்கள். மனதை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்.

ராகு, கேது 2, 8ல் இருந்து விலகுவதால் இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கும். தாய் உடல்நிலை ஆரோக்கியம் பெறும். தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களைப் பெருமை பட வைக்கும்.

ஷேர் மார்க்கெட் விஷயங்களில் ஆதாயம் உண்டு. எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்களும், வாழ்க்கைத்துணையால் விரயங்களும் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தை உடல்நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிதுர்வழிபாடு தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரைவில் உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. நம்பிக்கையோடு இருங்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 20, 21, 28, 29, 30. அக் 1, 2.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 23, 24, 25.

மிதுனம்

சமாதானத்திலும், சாத்வீகத்திலும் அதிக நம்பிக்கையுடைய மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரித்து புத ஆதித்திய யோகம் பெறுவதால் நன்மை பல விளையும். உங்கள் திறமை வெளிப்படும். ஆளுமை திறன் அதிகரிக்கும். புகழ், செல்வாக்கும் உயரும்.

மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் இனிய பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கை வந்து சேரும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். முயற்சிகள் வெற்றியடையும். தாயின் அன்பும், ஆதரவும் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு.

வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர்மார்க்கெட்டில் லாபம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் இறுதி வெற்றி உங்களுடையதே.

சிறிய முதலீடு பெரிய லாபத்தை தரும். உடல் ஆரோக்கியம் சீரடையும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து புரிந்துணர்வும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். தந்தை உடல்நலனில் கவனம் தேவை.

பிதுர் வழிபாடு தேவையற்ற பிரச்னைகளை குறைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 21, 22, 23, 30. அக் 1, 2.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 26, 27, 28.

கடகம்

பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 3ல் சூரி, புதனுடன், புத ஆதித்திய யோகம் பெறுவதும், 10 ல் செவ்வாய் திக் பலம் பெறுவதும் நல்ல யோகமான அமைப்பு ஆகும். சுகமான அனுபவங்கள் உண்டாகும். தாய் வழியில் ஆதரவு அதிகரிக்கும்.

உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். இருப்பினும் எதிலும் அளவுக்கு மீறிச் செயல்படுவதை தவிர்க்கவும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடன் பிறப்புகளால் ஆதாயம் இருந்தாலும், சிறு செலவீனங்கள் உண்டு. மனதில், தைரியம் உற்சாகம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பிரபலங்களின் நட்பும், அறிமுகமும் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளால் பெருமையடைவீர்கள். ஷேர் மார்க்கெட் விஷயங்களில் லாபம் உண்டு. உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதால் குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அருளை பெறுவீர்கள்.

எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, மனக் கசப்புகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் வெளியாட்களின் தலையீட்டைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வாழ்வில் சிறு சிறு தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். நண்பர்கள் விஷயத்தில் அளவோடு இருங்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 23, 24, 25. 26, 27, 28.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 28, 29, 30.

சிம்மம்

தன் காரிய சாதனையில் விடாமுயற்சி கொண்டு வெற்றி பெறும் சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் 2 ல் புதனுடன் புத ஆதித்திய யோகம் பெறுவது, தன, லாபாதிபதி சம்பந்தமும் பொருளாதார நிலையில் நல்ல உயர்வை ஏற்படுத்தும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.

நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கை வந்து சேரும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளால் மனக்கசப்பும், வீண் விரயமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

எதிர்பாராமல் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். தாய் உடல் நிலை ஆரோக்கியம் அடையும். உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள்.

வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகள் உடல்நிலை சீரடையும். பூர்வீக சொத்து பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் புரிந்துணர்வு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் அதிக கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உடல் ஆரோக்கியம் மேம்படும். மூத்தோர்களின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை.

வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை பகைத்து கொள்ள வேண்டாம். அலுவலக ஆவண விஷயங்களில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதுமையான சிந்தனைகளால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல மாற்றங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக் 6, 7, 8, 9, 10.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 30, அக் 1, 2.

கன்னி

பழகுவதற்கு எளிமையாகவும், பண்புமிக்கவராகவும் உள்ள கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசியிலே இருந்தாலும், விரயாதிபதி சூரியனும் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை.

தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச் செலவுகள் உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஓரளவு விரயத்தை குறைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலமாக நல்ல வளர்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை தேவையான அளவு உயரும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். உடன் பிறப்புகளால் மன கசப்புகளும், இழப்புகளும் உண்டாகுமென்பதால் கவனம் தேவை. தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்து கொள்ளுங்கள்.

எந்த விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். மாத முற்பகுதியில் கேது 3 மிட சஞ்சாரம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் வீண் பிரச்னைகள், மனக்கசப்புகள் சிறிது சிறிதாக குறையும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும்.

குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் வருங்காலத்திற்கு தேவையான விஷயங்களை நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகள், வீண் குழப்பங்கள் மேலோங்கும். தியானம், யோகா போன்ற விஷயங்களால் மனதை திடமாக வைத்து கொள்ளுங்கள். எதிர்மறை சிந்தனைகளை தவிருங்கள். எதிரிகளால் சிறு சிறு பிரச்னை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களால் லாபம் உண்டு. நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 28, 29, 30. அக் 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம நாட்கள்: அக் 3, 4, 5.

துலாம்

இக்கட்டான நேரத்திலும் தக்க முடிவை எடுத்து செயல்படுத்தும் துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு பத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

எதிலும் கடமை உணர்வுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்திறனை மற்றவர்கள் மெச்சுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் மேம்பாடு அதிகரிக்கும். மனைவி வழியில் வருமானம் உண்டு. மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

உடன் பிறப்புகளால் மன கசப்புகள் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம், சிந்தனை மேலோங்கும். எதிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

வீடு, வாகன வசதிகள் உண்டாகும். இருப்பினும் புதிய வீடு, வாகனம்வாங்கும் போது ஆவண விஷயங்களில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட் விஷயங்களில் கவனம் தேவை. எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். இருப்பினும் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.

புரிந்துணர்வு ஏற்பட்டு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருந்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. பிதுர் வழி சொத்து பிரச்னை அதிகரிக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. தொழிலில் தற்காலிக முடக்கமும், பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். நண்பர்களால் பிரச்னைகளும், இழப்புகளும் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வீண் விரயங்கள் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 30, அக் 1, 2, 10, 11, 12.

சந்திராஷ்டம நாட்கள்: அக் 6, 7, 8.

விருச்சிகம்

எந்த விஷயத்திலும் அதிரடியாக செயல்பட்டு சாதனை படைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 6ல் ஆட்சி பெற்றும், குரு 2 ல் பலம் பெற்றும் சஞ்சரிப்பதாலும் சிறு, சிறு பிரச்னை வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். எதிலும் அதிகப்படியாக சிந்திப்பதை தவிர்க்கவும். தியானம், யோக பயிற்சி உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். எதிலும் உற்சாகமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.

கோபத்தையும், குரோத மனப்பான்மையையும் தவிர்ப்பது நல்லது. தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களை பெருமை பட வைக்கும். எதிரிகளால் மறைமுக பிரச்னைகள் உருவாகும்.

அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். தம்பதியர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தந்தையால் அனுகூலம் உண்டு. பிதுர் வழி சொத்து பிரச்னைகள் சாதகமாக முடியும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உயரதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சில நேரங்களில் குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 17,18. அக் 3, 4, 5.

சந்திராஷ்டம நாட்கள்: அக் 8, 9, 10.

தனுசு

நீதி, நேர்மை, நாணயம் மிக்க தனுசு ராசி அன்பர்களே, தற்போது உங்கள் ராசியிலே உங்கள் ராசி நாதன் குருபகவான் ஜென்ம குருவாக சஞ்சரித்தாலும், ஜென்ம கேது விலகி 12ல் சஞ்சரிப்பதும், ராகு பகவான் 6 ல் சஞ்சரிப்பதும் மிக யோகமான பலன் ஆகும். இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள், குழப்பங்கள் படிப்படியாக குறையும். மனதில் தெளிவும், நம்பிக்கையும் பிறக்கும்.

எதிர்மறை சிந்தனை விலகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சில் கவனம் தேவை. எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். குடும்ப விஷயங்களில் விட்டு கொடுத்து பொறுமையாக கையாளுங்கள்.

உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். முக்கிய பிரமுகர்கள் உதவியாக இருப்பார்கள். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

தியானம், யோகா செய்வதால் மன அமைதி பெறலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் பெறுவீர்கள். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு. எதிரிகளால் ஆதாயமும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமும் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பணவரவு உண்டாகும்.

தந்தை வழியில் நன்மை உண்டு. தந்தை உங்கள் வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயரதிகாரி உங்களுக்கு சூட்சமங்களை சொல்லித் தருவார். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 18,19,20. அக் 6, 7, 8.

சந்திராஷ்டம நாட்கள்: அக் 10 11 12.

மகரம்

உழைப்பின் பெருமையை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் உங்கள் ராசியிலே இருந்தாலும், இதுவரை 12 ல் சஞ்சரித்த கேது பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிப்பது எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி காண கூடிய நிலையாகும்.

பொருளாதார நிலையில் பிரச்னை இருப்பதால் சிக்கனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். சகோதர உறவுகளில் சிறு மனஸ்தாபங்களும், விரயங்களும் வந்து நீங்கும்.

எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். எதிர்மறை சிந்தனைகளாலும், கவலைகளாலும் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். எதிலும் பொறுமை, நிதானம் தேவை. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் மனதில் எதையும் சாதிக்க இயலும்.

தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். காதலால் சந்தோஷம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட் விஷயங்களில் கவனம் தேவை. எதிரிகளால் சிறு பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் காதல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் கை ஓங்கும்.

மனைவி வழியில் வருமானம் வரும். தந்தை வழியில் சிறு, சிறு விரயம் ஏற்பட்டாலும், அனுகூலம் உண்டு. மூத்தோர்களின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும்.

உயரதிகாரிகளிடம் மன கசப்புகள் இருந்தாலும் உங்கள் செயல்பாடுகளால் அவர் திருப்தியடைவார். நண்பர்களால் ஆதாயம் உண்டு. முக்கியஸ்தர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் உண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 20, 21. அக் 8, 9, 10.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 17, 18. அக்டோபர் 12, 13, 14.

கும்பம்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பேரார்வம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்தாலும், தற்போதைய குருவின் சஞ்சாரம் மிக சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறும் சாமர்த்தியம் உண்டாகும். உங்கள் திறமையால் வெல்வீர்கள். புகழ், செல்வாக்கு கூடும். இருப்பினும் தேவையற்ற விரயங்கள், வீண் செலவுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

பணம், கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வரும். உங்கள் இனிய பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும்.

உடன்பிறப்புகளுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அண்டை, அயலார் உதவிக்கரமாக இருப்பார்கள். தாய் உடல் நலனில் கவனம் தேவை.

தாய் மற்றும் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளருடன் பிரச்னைகள் வரலாம். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

குழந்தைகள் உடல் நிலை சீராகும். குழந்தைகள் சிந்தனை மாறி நல்வழிக்கு திரும்புவார்கள். பெற்றோர் சொல்லுக்கு மரியாதை கொடுத்து நடப்பார்கள். காதல் பிரச்னை தீரும். எதிரிகளிடம் கவனம் தேவை.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இருப்பினும் மனைவி வழி பணவரவு உண்டு. தந்தை உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பொறுமை, நிதானம் தேவை.

உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். உங்கள் திறமைக்கேற்ற உயர்வு மறுக்கப்படலாம். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 21, 22, 23, 24, 25. அக் 10, 11, 12.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 18,19,20. அக் 15,16.

மீனம்

கலைகளில் ஆர்வமும், வாழ்க்கை ரசித்து வாழ்வதில் இன்பமும் கொண்ட மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ல் இருந்து உங்களை பாடாய் படுத்தினாலும், தற்போது உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும், 9ல் கேதுவும் சஞ்சரிப்பது வாழ்வில் நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கோபமான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும். உடன் பிறப்புகளுடன் மன கசப்புகள் வந்து நீங்கும்.

அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். முக்கிய பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். தடைகள் உடைபடும். முயற்சி திருவினையாகும். மனோபலமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தாய் உடல் நிலை சீராகும். வீடு, சொத்து மற்றும் வாகனம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை.

ஷேர் மார்க்கெட் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் புரிந்துணர்வு ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. திடீர் யோகம் கிட்டும். தந்தையால் அனுகூலம் உண்டு.

தந்தை மற்றும் குருவின் வழிகாட்டுதல் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஆவண விஷயங்களில் அதிக கவனம் தேவை.

உங்களை பற்றிய வீண் வதந்திகள், பிரச்னைகள், தடைகள் இனி சிறிது சிறிதாக குறையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பொறுமை பெருமையை தேடி தரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப் 17, 18. அக்டோபர் 12, 13, 14.

சந்திராஷ்டம நாட்கள்: செப் 20, 21.