புரட்டிப்போட காத்திருக்கும் சனி… மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்… இந்த வி்டையங்களில் எச்சரிக்கை தேவை! காத்திருக்கும் பேராபத்து…

0
159

அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார்.

ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார் 23ஆம் தேதி கன்னி ராசிக்கு வந்து நீச்சமடைகிறார்.

கன்னி ராசியில் உள்ள சூரியன் 17ஆம் தேதி துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். புதன் துலாம் ராசியில் இருந்து வக்ர கதியில் கன்னி ராசிக்கு வருகிறார்.

விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்க தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

இந்த கிரகங்களின் மாற்றம் கூட்டணியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். எந்த விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மகரம் சூரியன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார், புதனோடு மாத பிற்பகுதிகளில் பத்தாம் வீட்டில் இணைகிறார். வேலையில் கவனமாக இருங்க.

அவசரப்பட வேண்டாம். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாகவும் எச்சரிக்கையாவும் பேசுவது நல்லது. செவ்வாய் வக்ரமடைந்து மீனம் ராசிக்கு வருகிறார். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

இந்த மாதம் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க, வேலை மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய விசயங்கள் பற்றி முடிவுகள் எடுக்கும் முன்பு யோசித்து செய்வது நல்லது. குரு 12ஆம் வீட்டில் இருக்கிறார் திடீர் விரைய செலவுகள் வரும்.

சுக்கிரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார். சுகங்கள் குறையும் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். பணம் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் யாருக்கும் இரவல் கொடுத்து விட்டு ஏமாந்து போக வேண்டாம்.

ராசி நாதன் சனி வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார். எந்த செயலையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள். சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்திருப்பதால் சில சிக்கல்கள் வரலாம்.

சில பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். செய்யும் செயல்பாடுகளில் வேலையில் கனகச்சிதமாக செய்து முடிப்பீர்கள். புதிய அங்கீகாரம் கிடைக்கும் வரை அதே வேலையில் நீடிப்பது அவசியம்.

ராகுவினால் சின்னச் சின்ன மனக்குழப்பம் வரும். கேது லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்டம் வரும்.

கும்பம் கும்பம் ராசிக்காரர்களே இந்த அக்டோபர் மாதத்தில் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. ஏழரை சனி காலமாக இருந்தாலும் பயம் வேண்டாம். ராகு நான்காம் வீட்டில் இருக்க கேது பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால் சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம் குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது.

வீண் விரைய செலவுகள் வரலாம் பண வருமானத்தில் தடை தாமதங்கள் ஏற்படும் இதுவே உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கோபமாக பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து நிதானமாக பேசுங்கள்.

எந்த முடிவு எடுக்கும் முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. வீண் விரைய செலவுகள் உங்களுக்கு மன சிக்கலை ஏற்படுத்தும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

தசாபுத்திகள் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. பணம் கடன் கொடுக்க வேண்டாம் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி தர வர வேண்டாம். திருமணம் சார்ந்த சுப காரியங்கள் செய்வதற்கான நேரம் கைகூடி வந்துள்ளது.

மாணவர்களுக்கு நல்ல மாதம், முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். வண்டி வாகனம் வாங்கும் போதும் வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

மீனம் அக்டோபர் மாதம் மீனம் ராசிக்காரர்களுக்கு சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம்.

செவ்வாய் உங்க ராசியில் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். பொருளாதார யோகம் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். சுக்கிரன் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

இதனால் உங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை யோகம்தான். புத்தி காரகன் புதன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தனலாபம் கிடைக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் போய் படிக்க யோகம் வரும்.

பத்தாம் வீட்டில் இருக்கும் குருபகவான் தொழில் வளர்ச்சியை கொடுப்பார். 11ஆம் வீட்டில் சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். ராகு கேது உங்களுக்கு நல்ல சகாயம் செய்வார்கள்.

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் முயற்சி வெற்றியை கொடுக்கும். எதையும் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வீர்கள். எதிலும் திருப்தி அடையாத நிலையில் இருக்கிறீர்கள்.