புழுவெட்டு எனும் முடி உதிர்தல் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

0
62

புழுவெட்டு எனும் ஒருவகை முடி உதிர்தல் குறித்து கேள்விப்பட்டதுண்டா? அதாவது தலையில் ஆங்காங்கே திட்டு திட்டாக சில இடங்களில் மட்டும் முடி கொட்டி வழுக்கை ஏற்பட்டிருக்கும். குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால், உடலில் உள்ள ரத்தத்தில் அதிக அளவு நச்சு கலக்கும் போது அதனை வெளிக்காட்டும் விதமாக இந்த புழுவெட்டு ஏற்ப்டும். உடலில் உள்ள அந்த நச்சு கழிவுகள் தலை பகுதியில் உள்ள வேர்க்கால்களை தான் முதலில் உணவாக எடுத்துக்கொள்ளும். இதனை கவனிக்காமல் விட்டால், தலையில் உள்ள மொத்த வேர்க்கால்களையும் அழித்துவிடும்.

இதற்கு காரணம் பழைய உணவுகளை சூடுபடுத்தி உண்ணுவது, துரித உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற உணவு முறையால் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி நன்னாரி சர்பத் எடுத்துகொண்டு உடல் ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டே வரும் போது உடலில் நச்சு கழிவுகள் சேராமல் முடியின் வேர்கால்களுக்கு புத்துணர்வு ஏற்படும். சிலருக்கு இந்த புழுவெட்டின் ஊறல் தலையில் இருந்து மீசை, புருவம், தலைமுடி என பரவி கொண்டே போகும். ஆரம்பத்திலே இதனை கண்டறிந்து வைத்தியம் செய்வது ஊறலை தவிர்க்கும்.

இது குணமாக வாரம் இருமுறை வெங்காயம் மற்றும் வேப்ப எண்ணெய் கொண்டு குளித்துவரும் போது, நாளடைவில் புழுவெட்டு குணமாகும். இது தவிர தினமும் ஒரு மணிநேரம் கற்றாழை கொண்டு புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து குளித்துவர 60 நாளிலே முடி வளர ஆரம்பிக்கும். விரைவில் பலன் வேண்டுமென்றால் புன்னை எண்ணெய், புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய், ஆடு தீண்டாபளை செடியின் சாற்றுடன் இவற்றை சேர்த்து வெயிலில் ஒரு வாரம் வைத்தபின்னர் இவற்றை கொதிக்க வைக்க வேண்டும். நுரை சத்தம் அடங்கியதும் இந்த கலவையை தினமும் இரவில் அப்ளை செய்துவந்தால் சில நாட்களிலே பூனை முடி போன்று முடிவளர ஆரம்பிக்கும்.

புழுவெட்டு வந்து குணமானவர்களுக்கு முடி அடர்த்தியாக வளர துவங்கும். வீட்டு மருத்துவத்துடன் நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இதனை எளிதில் குணப்படுத்தலாம். இப்போதுள்ள நவீன மருத்துவமுறை தற்காலிக பலன் அளித்தாலும், மீண்டும் அந்த புழுவெட்டின் ஊறல் பரவ ஆரம்பிக்கும் என்பதால் நிரந்தர இயற்கை முறைகளை பின்பற்றுவதே நல்லது.