பெண் யாசகர் தாக்கியதில் வயோதிப யாசகர் பலி

0
4

அநுராதபுரம் – தொடரரூந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தொடரரூந்து குறுக்கு வீதிக்கு அருகில் வைத்து பெண் யாசகர் ஒருவர், தாக்கியதில் வயோதிப யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த வயோதிப யாசகர், குறித்த பெண் யாசகருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டபோது, அந்தப் பெண், தனது பாதணியால் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கீழே விழுந்து வயோதிப யாசகர், உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியை சேரந்த 62 வயதுடைய யாசகரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.