பேட்டிங்கில் அசத்தும் இங்கிலாந்து அணி

  0
  9

  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

  அதில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

  மேற்கிந்தியத் தீவு அணி டாஸ்க் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  முதல் டெஸ்டில் விளையாடாத ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், பிராட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

  முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. சிப்லி 86, ஸ்டோக்ஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

  இந்நிலையில் நேற்று போலவே இன்றும் சிப்லி 120 ரன்களும் ,ஸ்டோக்ஸ் 176 ரன்களும் எடுத்து திறமையுடன் விளையாடினார்கள். சுழற்பந்துவீச்சாளர் சேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

  மேலும் 2-ம் நாள் முடிவில் மேற்கிந்தியதீவுகள் அணி 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.