பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை… குறிப்பாக தமிழ் மக்களுக்கானது

0
285

ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்று தருவதாக தெரிவித்து, வங்கி கணக்குகளில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு அவதான எச்சரிக்கையினை காவற்துறை விடுத்துள்ளது.

இவ்வாறான நிதி மோசடி தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, தகவல் மற்றும் ஊடகத்துறை பிரதி காவற்துறை மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து வெளிநாடு செல்லவுள்ள நபரின் பெயர், தாய் மற்றும் தந்தை பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் , வீட்டு முகவரி, கைபேசி இலக்கம் மற்றும் சொத்து விபரங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு முழுமையான தகவல்களை பெற்று நீங்கள் வெளிநாடு செல்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்து, வெளிநாடு செல்லவுள்ள நபரின் பெயரிலேயே 2 மில்லியன் ரூபாய் வரையில் பண வைப்புசெய்யுமாறு கோருவதுடன் பின்னர் வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட முழுமையான விபரங்களை வைத்து, வங்கியில் வைப்பில் இடப்பட்ட 2 மில்லியன் ரூபாய் பணத் தொகையினை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுவரை 60 இலட்சம் வரையில் இவ்வாறு நிதி மோசடி செய்துள்ளமை அறியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.