மன்னாரில் குண்டுத்தாக்குதல்

0
19

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17.07.2020) வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டு குண்டு தாக்குதலின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேமாலை சந்தியோகு (வயது-56) என்ற குடும்பஸ்தரே படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சேமாலை சந்தியோகு என்பவருடைய மகனுடன் அக்கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இரவு இப்பகுதிக்கு வந்த நில இளைஞர்கள் வீட்டின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராக்களை உடைத்துள்ளனர்.

பின்னர் வீட்டின் முன் பகுதிக்கு வந்து இரவு 9.45 மணியளவில் மதிலினால் நாட்டு குண்டு ஒன்றை வீட்டு வளாகத்தினுள் எறிந்துள்ளனர்.

இதன் போது குறித்த குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்ததில் -இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேமாலை சந்தியோகு(வயது-56) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டதோடு, இன்று சனிக்கிழமை காலை விடுசட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார் குறித்த வீட்டிற்குச் சென்று விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடித்த குண்டு தொடர்பாகவும் ஏனைய விடையங்கள் தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.