மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படும் என்று ராதாரவி

0
6

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்படும் என்று ராதாரவி தெரிவித்திருக்கிறார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவு உலக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
இந்நிலையில், டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் டத்தோ ராதாரவி தலைமையில் கூடி, எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.