மற்றுமொரு பிரபல நடிகர் வீட்டில் நால்வருக்கு கொரோனா தொற்று

0
26

பிரபல பொலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனுபம் கெர் தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுபம் கெர் என்பவருடைய தாயாரானா துல்ஹரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய சகோதரர், சகோதரரின் மனைவி அவர்களது மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்கப்பட்டுள்ளது.

பொலிவுட் நடிகர் அனுபம் கெர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார் என்பதோடு அவருக்கு தொற்று இல்லை எனவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளதாகவும் தனது பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.