மிகவும் கடினமான காலத்தை நோக்கி பயணிக்கும் இலங்கை மக்கள்… எச்சரிக்கும் வைத்தியர் சங்கம்!

0
18

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், இரண்டாவது அலை ஏற்படும் இறுதி நிலையை அண்மித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை விசேட வைத்தியர்களின் சங்கம் விடுத்துள்ளது.

நாட்டின் நிலைமை தொடர்பில் விசேட வைத்தியர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக, சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எந்த திசையில் திரும்பும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொரோனவின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை முகம் கொடுத்த முறை மிகவும் சிறப்பானதாகும். அதனை குறித்து திருப்தி அடைய முடியும். அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தவறான விழிப்புணர்வு காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக நூற்றுக்கு நூறு வீதம் கூற முடியாதென்ற போதிலும் அதற்கு அருகில் நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.