முல்லைத்தீவு ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடிப்பு..

0
6
46 / 100

முல்லைத்தீவு – மல்லாவி, ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மாலை சேவையில் ஈடுபட்ட தனது பேருந்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் நிறுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டு கதவை தட்டுவது போன்ற சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்து பார்த்த போது பஸ் தீப்பிடித்து எரிந்ததாகவும் கண்ணாடிகள் வெடித்து சிதறிய சத்தமே தமக்கு கேட்டதாகவும் யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.