முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால்

0
6

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் தாம் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கடலை நம்பி வாழும் சுமார் 5,000 மீனவக் குடும்பங்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்துக்கு போராடிவரும் நிலையில், தற்போது இறால் சீசன் ஆரம்பிக்கும் நிலையில், அவற்றை இந்தியன் இழுவைப் படகுகள் அழித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தடுத்து நிறுத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.

தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், இம்மாதம் 15ஆம் திகதி முதல் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்