முல்லைத்தீவு – மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று வெடித்த கைக்குண்டு..

0
14

முல்லைத்தீவு – மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக தடயவியல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் இந்த குண்டு அண்மையில் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.

இதேவேளை நேற்று அதிகாலை 5.30 தொடக்கம் காலை 10 மணிவரை குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.