முழு அழுத்தத்தையும் தனி மனிதனாக தாங்கிய தோனி… களத்தில் அப்படி என்னதான் நடந்துச்சு..? இறுதியில் சென்னையின் நிலை இதுதான்!

0
58

இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிரஷர் முழுக்க முழுக்க கேப்டன் தோனி மீது விழுந்தது. அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தோனி தள்ளப்பட்டார். கடைசி நேரத்தில் இதனால் தோனி கடுமையாக திணறினார். சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் தொடக்கத்தில் சென்னை அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. சென்னை அணியில் இன்று களமிறங்கிய பிராவோ, ஷரத்துல் தாக்கூர் இருவரும் நன்றாக பவுலிங் செய்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்தில் திணறியது. ஆனால் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் ஹைதராபாத் அணியில் வரிசையாக முக்கிய வீரர்கள் விக்கெட் இழந்தனர். ஆனால் கடைசியில் வந்த வீரர்கள் அதிரடி காட்டினார்கள்.

ஹைதராபாத் அணிக்காக மிடில் ஆர்டரில் இறங்கிய பிரியம் கார்க் 51 ரன்கள் எடுத்தார். 26 பந்துகள் பிடித்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் சர்மா 24 பந்துகள் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ் அடக்கம். இதனால் ஹைதராபாத் 150க்குள் சுருண்டு விடும் என்று கருதப்பட்ட நிலையில் 164 ரன்கள் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய சென்னை அணி எப்போதும் போல இந்த முறையும் சொதப்ப தொடங்கியது. தொடக்கத்தில் அதிரடியாக ஆடுவது போல நம்பிக்கை இருந்தாலும் கூட வரிசையாக விக்கெட் விழுந்தது. முதலில் புவனேஷ்வர்குமார் ஓவரில் வாட்சன் போல்டானார். அதன்பின் நடராஜன் ஓவரில் ராயுடுவும் அதிர்ச்சி அளித்து அவுட்டானார்.

நன்றாக ஆடிக்கொண்டு இருந்த டு பிளஸிஸை கேதார் ஜாதவ் தேவையில்லாமல் ஓடி வர வைத்து ரன் அவுட் செய்தார். அதன்பின் கேதார் ஜாதாவும் அவுட்டானார். இதனால் மொத்தமாக அணியின் பிரஷர் எல்லாம் தோனி மீது குவித்தது. தோனி 3 விக்கெட் விழுந்த நிலையிலேயே களத்திற்கு வந்துவிட்டார். இதனால் தோனிதான் மொத்தமாக போட்டியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதன்பின் களமிறங்கிய தோனி – ஜடேஜா ஜோடி எப்போதும் போல டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது.ஆனால் ஒரு பக்கம் தோனி மெதுவாக ஆடினாலும் இன்னொரு பக்கம் அடித்து தூள் கிளப்பினார். 35 பந்துகள் பிடித்த அவர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் 50 ரன்கள் எடுத்தார். தோனி இன்னொரு பக்கம் மெதுவாக ஆடினார். அதன்பின் களமிறங்கிய சாம் கரன் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார்.

கடைசி நேரத்தில் இதனால் தோனி கடுமையாக திணறினார். துபாய் வெப்பநிலை காரணமாக மூச்சு கூட விட முடியாமல் தோனி திணறினார். இதனால் அவருக்கு இடையில் பிசியோ மருத்துவர் வந்து தண்ணீர் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. நீர் சத்து குறைந்த காரணத்தால்.. தோனி மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டார். இதனால் அவருக்கு பிசியோ மருத்துவர் வந்து தண்ணீர் கொடுத்தார்.

இதனால் அவரால் பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை. கடைசியில் இவர் போட்டியை முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். சென்னைக்கு இந்த போட்டியில் நிறைய லக்கி விஷயங்கள், ஹைதராபாத்தின் தேவையில்லாத மிஸ் பீல்ட்கள் உதவியது. ஆனாலும் கடைசி நேரத்தில் தோனி எவ்வளவு கஷ்டப்பட்டும் அவரால் போட்டியை பினிஷ் செய்ய முடியவில்லை.