மேலும் சில இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று

0
11

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3391 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3254 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 125 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.