யாழில் திடீரென குவிக்கப்பட்ட படையினரால் பரபரப்பு!

0
9
7 / 100

யாழ்.செம்மணி மயானத்தில் இன்று அதிகாலை பெருமளவு படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய இவ்வாறு அதிகாலை வேளையில் படையினர் குவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் உள்ளிட பகுதியில் இன்று சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கிடைக்கப்பெற்ற தகவலுக்குகமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.