யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

0
9

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன.

உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் பின்பக்கமாக சென்ற திருடர்கள் வீட்டின் கதவினை உடைக்க முற்பட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு வீட்டின் குடும்பஸ்தர் வெளியில் வந்துள்ளார். இதன்போது அவரை கம்பியால் தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த நகைகளை திருடினர். இதன்போது குறித்த வீட்டில் இருந்தவர்கள் அவலக் குரல் இட்டுள்ளனர். அயலவர்கள் ஓடி வந்த போதும் திருடர்கள் திருடிய நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.