யாழில் 5 இளைஞர்கள் அதிரடியாகக் கைது… அதிர வைக்கும் காரணம்

0
195

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்குப் பகுதியில் ஹெரோயின் நுகர்ந்த குற்றச்சாட்டில் 5 பேரை கோப்பாய் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கொக்குவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக இளைஞர்கள் நிற்பதாக அப்பகுதி மக்களினால் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யும் போது அவர்களிடமிருந்து 210 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.