வெள்ளவத்தை கடலில் இருந்து இளம் பெண்ணொருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டலுக்கு முன்பாக வந்த குறிப்பிட்ட பெண், மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு கடலுக்குள் சென்றதாகவும், சில நிமிடங்களின் பின்னர் கடல் அலைகளில் அவரது சடலம் அடித்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடலிலிருந்து அவரது சடலம் பின்னர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
மரணமான பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.