ராசிகளிலே மிகவும் கோவக்கார ராசிக்கும் ராகு, கேதுவிற்கும் இடையே நடக்கப்போகும் யுத்தம் – ஜெயிக்கப்போவது இவர்கள்தான்

0
264

ராகு கேது பெயர்ச்சி வரும் செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 18) வாக்கிய பஞ்சாங்கத்தின் படியும், செப்டம்பர் 23ம் தேதி (புரட்டாசி 7) ஏற்படுகிறது.நிழல் கிரகமாக இருந்தாலும் சனி, குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து மிகவும் கவனிக்கத் தக்க கிரகங்களின் பெயர்ச்சியாக ராகு கேது பார்க்கப்படுகிறது.

நிழல் கிரகமாக இருந்தாலும் சனி, குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து மிகவும் கவனிக்கத் தக்க கிரகங்களின் பெயர்ச்சியாக ராகு கேது பார்க்கப்படுகிறது.

வேகமும், ஆளுமையும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ராகு 11ம் இடத்திலிருந்து 10ம் இடமான ரிஷப ராசிக்கும், ஞானத்திற்கு உரியவரான கேது 5ம் இடத்திலிருந்து 4ம் இடமான விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்.

சிம்ம ராசிக்கு பல வகையில் மிக நல்ல பலனை தரக் கூடிய அமைப்பாக ராகு கேது பெயர்ச்சி சஞ்சாரம் அமைகிறது. கடந்த ஒன்னறை ஆண்டுகளாக இந்த சிரம நிலைகள் மாறு. உங்களின் செயலில் நிதனமும், பேச்சில் கவனம் செலுத்தினால் எந்த சூழலிலும் முன்னேற்றத்தை தரக் கூடிய நிலை இருக்கும். சில மறைமுக எதிரிகளால் உங்கள் செயல்பாடு காலதாமதமாகலாம்.

பெண்களுக்கு புது சொத்துக்கள் சேரும். உங்களின் எதிரிகளின் தொல்லை நீங்கும். அதனால் நீங்கள் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான அன்பும், உறவும் சிறக்கும். வீட்டிலும் அலுவல பணியிலும் சற்று விட்டுக் கொடுத்துச் செல்வதால் அனைத்தும் நன்மையில் முடியும்.

கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். ஆனால் சற்று கவனமாக படிப்பது அவசியம். கெட்ட சகவாசம் இல்லாமல் இருந்தாலே கல்வியில் முன்னேற்றத்தை பார்க்கலாம். இரவில் அதிகநேரம் விழித்திருப்பதை தவிர்க்கவும். அதனால் உறக்கம் கெட்டு கல்வியில் மந்தம் ஏற்படக் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற சூழல் இருக்கும். பணியில் சிலருக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் கருத்து பரிமாற்றம் செய்யும் போது மேலதிகாரிகளால் சில அவப்பெயர்கள் ஏற்பட்டு மறையும். சிலர் பணிச்சுமையால் அவதிப்படக் கூடும். இருப்பினும் பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழிலதிபர்கள் அவர்களின் தொழிலில் புதிய வாய்ப்புக்கள், ஒப்பந்தங்கள் பெறுவர். தொழில் முன்னேற்றமும், லாபகரமான முதலீடும் ஏற்படக் கூடும். சிலர் வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அமையும். அதனால் நல்ல லாபமும், அனுகூலமும் ஏற்படும்.

மகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனம் தேவை. எந்த முடிவு எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. சில வேலைகள் முடிய தாமதம், எதிர்மறை முடிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் சாதகமாக ஏற்படும். சில வீண் ஆசைகள் மனதில் ஏற்படக்கூடும்.

பூரம்
எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவதால் பெரிய பிரச்னை ஏற்படாமல் சாதகமாக அமையும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும், நன்மை தரும். பணி இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது.

உத்திரம்
இந்த பெயர்ச்சி உங்கள் குடும்பம் குறித்து கவலைகள் ஏற்பட்டாலும், அது விரைவில் சுமூகமடையும். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். குடும்பத்தினர், உறவினரிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. பதறாமல் காரிய செய்ய வெற்றி உண்டாகும்.

பரிகாரம்
செவ்வாய் தோறும் நாக தேவர் வழிபாடு செய்யவும்.
வில்வ இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ய அனைத்து தடங்களும் விலகும்.
ஓம் நமசிவாயா நம மந்திரத்தை தினமும் 11 முறை உச்சரித்து வர சகல பிரச்சினைகளும் தீரும்.