ரோகித் சர்மாவை ‘வடா பாவ்’ என்ற சேவாக்: கொந்தளித்த ரசிகர்கள்

0
5

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் உடல் எடை போட்டது. ஐபிஎல் தொடரின் ஆரம்பித்த பின்னர்தான் ஒவ்வொரு வீரர்களும் குண்டு குண்டாக இருந்தது தெரியவந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் பெரிய அளவில் குண்டாக தெரிந்தனர்.
ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் சவுரப் திவாரி தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேவாக் ‘சமோசா பாவ்’ என கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அணிக்கெதிதராக ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் அவரது பிட்னெஸ் குறித்து பேசிய சேவாக், ‘வடா பாவ்’ என ரோகித் சர்மாவை அழைத்தார். ‘வடா பாவ்’ என்பது பன்னில் உருளைக்கிழங்கு மசாலா போன்டாவை சேர்த்து விற்கப்படும் மும்பையின் சிறந்த சாலையோர உணவாகும்.
ரோகித் சர்மாவை வடா பாவ் என சேவாக் அழைத்ததால், ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக திட்டி வருகிறார்கள்.