வடக்கில் குறிப்பிட்ட இடங்களுக்கு நாளை முழுவதும் மின்தடை

0
183

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(05) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நல்லூர் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நாயன்மார்கட்டு, கனகரட்ணம் சந்தியிலிருந்து நல்லூர் செட்டித்தெரு வரை, இலந்தைக்குளம், புங்கன்குளம், முல்லை, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு, கல்வியங்காட்டுச் சந்தி, கிளிகடைச் சந்தி, நல்லூர் பூங்கனிச் சோலை, இராமலிங்கம் சந்தி, ஆடியபாதம் வீதி, இராஜ வீதியிலிருந்து கோப்பாய் பொலிஸ் நிலையம் வரை, சட்டநாதர் வீதி, நல்லூர் கோவில் வீதியின் ஒரு பகுதி, சிவன்- அம்மன் வீதியின் ஒரு பகுதி, நல்லூர் மாநகரசபை அலுவலகம், நல்லூர் செம்மணி வீதி, வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகம், நாயன்மார்கட்டு Carloton Sports Network(CSN), SOS சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங் பி.எல்.சி, காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், சீமெந்துக் கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை, காங்கேசன்துறைக் கடற்படை முகாம், காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை SLNS Uththara, மயிலிட்டி, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், மயிலிட்டி 5 ஆவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம், தையிட்டி, வறுத்தலை விளான், நாவலடி வியாபாரி மூலைப் பிரதேசம், பலாலி, பலாலி விமான நிலையம், பலாலி விமானத் தலைமைக் காரியாலயம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.