வடக்கில் மாட்டு வண்டி சவாரி போட்டி

0
40

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையில், மன்னார் கட்கிடந்தகுளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் கட்கிடந்த குளம் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று மாலை மாட்டுவண்டி சவாரி போட்டி இடம்பெற்றது.

இதில் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 25 சோடி காளைகள் கலந்து கொண்டன.

போட்டியானது ஏ, பி, சி, டி ஆகிய நான்கு பிரிவுகளில் இடம்பெற்றது. இதன்போது ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகள் வெற்றி பெற்றன. டி பிரிவில் யாழ் மாவட்ட காளைகள் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது