வடக்கில் ஹர்த்தால்… வடக்கு மீண்டும் மாறுமானால் நாங்கள் இன்னொரு போருக்கும் தயாராக உள்ளோம்… எச்சரிக்கும் மஹிந்த

0
73

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில் பிரதமர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி: திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?

பதில்: அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும். என கடும் தொனியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.