வளிமண்டலத் திணைக்களம் விடுத்துள்ள விசேட செய்தி

0
12

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 02.00 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.