வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – பயணிகளின் நிலை..!

0
14

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து நேற்று மாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

மழை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து சாலியவெவ பாடசாலைக்கு அருகே குடைசாய்ந்துள்ளது.

விபத்தில் 10இற்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதையூடாக வெளியேறியுள்ளார்கள்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.