வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

0
37

அம்பலங்கொட தொடக்கம் காலி சவுன்லன்ட்ஸ் கல்லூரியில் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளுடன் பயணித்து கொண்டிருந்த சிற்றூந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

குறித்த சிற்றூந்து உந்துருளி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்து, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீடியாகொட காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மீடியாகொட காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும் வாக்கு பெட்டிகள் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.