விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு தடை நீடிப்பு… ஐரோப்பிய ஒன்றியம்

0
44

விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளை தனது புதிய பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடையானது 30 உறுப்பு நாடுகளில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கஹால்சா, ஹிஸ்புல் முஜாதீன், காலிஸ்தான் சிந்தபாத் ஹமாஸ், ஹிஸ்புல்லா, துருதிஷ்தான் தொழிற்கட்சி, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உட்பட 20 அமைப்புகளுக்கான தடையை நீடிப்பது என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூலை 30 ஆம் திகதி தீர்மானித்தது.

அதேவேளை பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் அந்த வழக்கின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.