விண்வெளி வீரர்கள் பூமிக்கு வருவதில் எதிர்நோக்கிய சிக்கல்

  0
  30

  Bob Behnken மற்றும் Doug Hurley எனும் இரு விண்வெளி வீர்கள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

  SpaceX திட்டத்தின் ஊடாக நாசா விண்வெளி ஆய்வு மையம் இவர்கள் இருவரையும் அனுப்பி வைத்திருந்தது.

  இந்நிலையில் நாளைய தினம் மீண்டும் அவர்களை பூமிக்கு கொண்டுவருவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

  எனினும் பாரிய புயல் ஒன்று ஏற்படவிருப்பதனால் இத் திட்டத்திற்கு இடையூறுகள் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கணவே கரீபியன் தீவுகளுள் ஒன்றான Puerto Rico இனை புயல் தாக்கியுள்ளது.

  இதனால் நாளைய தினமும் புயல் தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.

  எவ்வாறெனினும் விண்வெளி வீரர்கள் இருவரையும் பூமிக்கு மீள அழைப்பதை தாமதப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.