வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

0
6

கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுற்றுலா, சுகாதார மற்றும் விமான சேவைகள் ஆகிய 3 அமைச்சுகளும் திட்டத்தை தயாரிக்க ஆதரவு வழங்கியுள்ளன.

சுற்றுலாத்துறை உட்பட கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஆராய்ந்த பின்னர் சுற்றுலா அமைச்சு தலைமையில் இந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சுகாதார மற்றும் விமான சேவை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 – 50 வரையிலான குழுக்களுக்கு நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் படிப்படியாக சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் உள்ளவாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மூன்று மாதங்கள் வரை நாட்டில் தங்கியிருக்கு விரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.