வெளி நாட்டிற்கு அனுப்புவதாக கூறி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பண மோசடி…பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

0
106

கனடா அனுப்பி வைப்பதாக தெரிவித்து பல்வேறு முறைகளில் நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

இந்த மோசடிக்குள் சிக்கிக்கொள்ளும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் நிலவும் பணம், ஒன்லைன் முறை மூலம் வேறு கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.