வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி… இவரை கண்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளவும்!

0
25

ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை கண்டுபிடிக்க மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை, அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 0112854880, 0112854885 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்யும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் தீவிர தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் பல இடங்களுக்கு சென்றதுடன், பொது போக்குவரத்திலும் பயணித்துள்ளதாக தெரிய வருகிறது.