தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து

0
6
51 / 100

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த பெண் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் தம்பலாகாமம் 96ஆம் கட்டைப் பகுதியிலுள்ள விகாரைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாலியபுர – யுனிட் 13 பகுதியில் வசித்து வரும் கமே கும்புர கெதரலலிதா மெனிகே (51 வயது) என்பவரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணுடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியான மிகிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த பத்மபிரிய குலதுங்க (40வயது) என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.