யாழ்ப்பாண பிரதான ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்! ரி.பிரதீபன் தெரிவிப்பு

0
7
50 / 100

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் புறப்பட உள்ளன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி ரயிலும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ்தேவி ரயிலும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ்தேவி ரயிலும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது.

ஏனைய ரயில் சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயிலும், இரவு தபால் ரயில் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.

நாளை 17 ஆம் திகதி தொடக்கம் காலையில் இருந்து உங்களுக்கு தேவையான ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ரயிலில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.