காணாமற்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி உறவினர்கள் தீச்சட்டி போராட்டம்…

0
27
12 / 100

காணாமற்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் A9 வீதி ஊடாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் சுழற்சி முறை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.