2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகைகள்…

0
2
56 / 100

2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர்களூடாகவும் தனியார் பரீட்சார்த்திகளாயின் அவர்களே குறித்த இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து ஒரு வாரத்திற்குள் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதும், அதன் பிரதியொன்றை பரீட்சை அனுமதிப்பத்திரத்துடன் இணைத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முதற்தடவையாக பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாறான சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.