கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை கடத்திச்சென்ற 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர் பொலிசார் கைது…

0
25
11 / 100

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகளை கடத்திச்சென்ற 20 மற்றும் 21வயதுடைய இரண்டு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த இருவரும் சிறுமிகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளே இவ்வாறு பொலிசாரால் நாவற்குழி பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ள நிலையில் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்த இளைஞர்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.