கோவிட் தொற்றோடு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள்…

0
70
11 / 100

இன்று ஆரம்பமாகியுள்ள 2020க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது திருப்திகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை நிலையங்களில் 38 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

நாடு பூராகவும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் நலன் கருதி சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.