கிளிநொச்சி அம்பாள் குளப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு..

0
10
11 / 100

அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணகளை மேற்கொண்டனர் அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய அடையாள அட்டையில் ஆறுமுகம் திலகேஸ்வரி எனவும் குடும்ப அட்டையில் இல 84 உருத்திரபுரம் பகுதி எனவும் குறிப்பட்டிருந்தது.

அந்த பகுதி கிராம அலுவலரிடம் தொடர்பு கொண்டு குறித்த இலக்கத்தினை உடைய காணி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

குறித்த பெண் குறித்த வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும் நேற்றைய தினம் மாலை வேளையில் வைத்தியசாலைக்கு சென்று வருவதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அவரின் தொலைபேசி நேற்றில் இருந்து இயங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

37 வயதான காமராஜ் திலகேஸ்வரி எனவும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் 3 வயது குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என்னும் கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.