12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள்… 08.08.2020 முதல் 14.08.2020 வரை

0
446

ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது ஆரம்பமாகிறது. இந்த வாரம் கிரகங்களில் சஞ்சாரத்தை பார்த்தால் மிதுனம் ராசியில் ராகு, சுக்கிரன், கடகம் ராசியில் சூரியன் புதன், தனுசு ராசியில் குரு,கேது, மகரம் ராசியில் சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் சந்திரன் மீனம்,மேஷம், ரிஷபம் ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் – கடகம் ராசி
செவ்வாய் – மீனம் ராசி
புதன் – கடகம் ராசி
குரு – தனுசு ராசி
சுக்கிரன் – மிதுனம் ராசி
சனி – மகரம் ராசி
ராகு – மிதுனம் ராசி
கேது – தனுசு ராசி

மேஷம்

தைரியம் தன்னம்பிக்கை கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி நிறைய நன்மைகளை செய்யப்போகிறது.

மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு நான்காம் வீட்டில் சூரியன், புதன் ஒன்பதாம் வீட்டில் கேது உடன் குரு, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் உங்க ராசிநாதன் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

உங்களுக்கு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அதிகம் கொடுக்கக்கூடிய சம்பவங்கள் நடைபெறப்போகுது அனுபவிக்கக் தயாராக இருங்க. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினை எதுவும் வராது. சொந்தக்காரங்க கிட்ட பேசும் போது ஜாக்கிரதையாக பேசுங்க.

இல்லைன்னா சண்டை வந்துரும், குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால் நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள்.

உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு சுப விரைய செலவுகள் வரலாம் காரணம் உங்க ராசிநாதன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

சுகமான வாரமாக அமையப்போகிறது காரணம் சுக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் கூட்டணி உங்களுக்கு மனதாலும் உடல் ரீதியாகவும் உற்சாகத்தை கொடுக்கும்.

எந்த சிக்கலையும் எளிதில் எதிர்கொள்வீர்கள். என்னதான் திடீர் செலவுகள் வந்தாலும்.

பணவரவு அதிகமாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்யாதீங்க.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். குலதெய்வ வழிபாடு செய்யுங்க நல்லது நடக்கும்.

ரிஷபம்

அன்பும் காதலும் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, எதையும் நேர்மையாக எதிர்கொள்ளும் உங்களுக்கு இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மூன்றாம் வீட்டில் சூரியன்,புதன் எட்டாம் வீட்டில் குரு, கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. லாப ஸ்தானத்தில் சந்திர மங்கல யோகத்தோடு இந்த வாரம் ஆரம்பமாகிறது. பண வரவு அதிகமாகும்.

சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் இந்த வாரம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்பவர்களுக்கு திறமை அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.

பதவி உயர்வு பற்றிய பேச்சு வார்த்தையும் இந்த வாரம் நீங்க அசையும் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்

அறிவாற்றலும் தன்னம்பிக்கையும் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுடைய ராசியில் சுக்கிரன் ராகு, இரண்டாம் வீட்டில் சூரியன்,புதன்,பத்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டில் சனி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. குடும்பத்தில் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம்.

அந்த பிரச்சினை குரு பார்வையால் தீரும். உங்க ராசிக்கு கிடைப்பதால் நிறைய நல்லது நடக்கும், தொழில் வியாபாரத்தில் உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அஷ்டமத்து சனியால் திடீர் தடைகள் ஏற்படலாம்.

செய்ய வேண்டிய வேலைகளை காலம் தாழ்த்தாமல் கால காலத்தில செய்து முடிங்க. திருமணம் சுப காரிய முயற்சிகள் இந்த வாரம் பேச வேண்டாத். பணம் விசயத்தில் கவனமாக இருங்க.

பெரிய அளவில் முதலீடுகள் செய்யாதீங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சரியான நேரத்திற்கு சரியாக சாப்பிடுங்க வயிறு பிரச்சினைகள் வரலாம்.

வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. வேகத்தை விட நிதானம் அவசியம்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் சூரியன்,புதன், விரைய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது,குரு, ஏழாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு சஞ்சாரம் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க.

எந்த வேலையை தொட்டாலும் அது சட்டென்று முடியாமல் அலைச்சலை தரும். இந்த மாதம் புதிதாக கடன் எதுவும் வாங்காதீங்க இது சரியான நேரமில்லை என்றாலும் வீடு வாகனங்களை லோன் மூலம் வாங்கலாம்.

அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுநாள் வரை முடங்கியிருந்தவர்கள் இனி வேலை விசயமான பயணங்களை ஆரம்பிக்கலாம். புதிய வேலைகள் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிம்மம்

வீரமும் விவேகமும் நிறைந்த சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு,கேது, ஆறாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 06.57 மணி முதல் ஆகஸ்ட் 09,2020 இரவு 7.06 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. வார தொடக்கத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம்.

சந்திரன் ஆரம்பத்தில் சாதகமற்ற நிலையில் இல்லை. நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உங்க தொழில் இந்த வார மத்தியில் அற்புதமாக இருக்கப் போகிறது. நிறைய லாபம் கிடைக்கும்.

திடீர் பண வரவும் அதிர்ஷ்டமும் வரும். உங்க பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

சின்னச் சின்ன விரைய செலவுகள் வந்தாலும் வருமானம் பல மடங்காக இருப்பதால் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.

உங்களுக்கு இதுநாள்வரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கி சாதகம் அதிகமாகும். உங்க எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

நீங்க எடுக்கப் போகிற முயற்சிகள் எல்லாம் வெற்றியில் கிடைக்கும். குரு பார்வை கிடைப்பதால் திருமண முயற்சிகள் சுபமாக முடியும். உங்க வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

கன்னி

புத்திசாலித்தனமும் அறிவும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு நான்காம் வீட்டில் குரு,கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 07.06 மணி முதல் ஆகஸ்ட் 12,2020 காலை 7.36 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.

கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். இந்த வாரம் புது வேலைக்காக செல்லும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

சிலருக்கு வேலையில் திடீர் இடமாற்றம் கிடைக்கும். பூர்வ புண்ணியத்தில இருக்கிற சனி உங்க சந்தோஷத்தை அவ்வப்போது கெடுக்கப் பார்ப்பார் என்றாலும் பயப்படாதீங்க. குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ வீண் வார்தைகளை விட வேண்டாம்.

கணவன் மனைவி இடையே திடீர் பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. கூடுமானவரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. திருமணம் சுப காரிய முயற்சிகளை ஒத்திப்போடுங்க.

உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க.

துலாம்

எந்த பிரச்சினையையும் எளிதாக எதிர்கொண்டு நியாயத்தின் பக்கம் நிற்கும் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு,கேது, நான்காம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் ஸ்தானத்தில் சுக்கிரன்,ராகு, பத்தாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 07.36 மணி முதல் ஆகஸ்ட் 14,2020 மாலை 06.04 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.

கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். வெளியூரில் இருந்து வரும் தகவல் நன்மையை தரும். குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு தொழில் வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும்.

வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நிறைய நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும். மனதில் இதுநாள் வரை இருந்த பயம், பதற்றங்கள் நீங்கும்.

பணவரவு நன்றாக இருக்கும். கூடவே செலவுகளும் தேடி வரும். சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் எதிர்கால படிப்புக்காக நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க.

விருச்சிகம்

வீரமான செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு,கேது, மூன்றாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவருமானத்தால் உங்க கடன்கள் அடைபடும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

வேலையில் இடமாற்றம், சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். இந்த வாரம் பணம் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.

எதிர்கால வாழ்க்கை தொடர்பாக இந்த வாரம் முக்கிய முடியவுகளை எடுக்காதீங்க.

திருமணம் சுப முயற்சிகளை எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் கசப்புணர்வுகளை ஏற்படும் என்பதால் கவனம். பெண் குழந்தைகள் வெளியிடத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தால் அதிக எச்சரிக்கை தேவை.

தனுசு

சந்தோஷமான மனநிலையில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் குரு,கேது, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஏழாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், எட்டாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்க வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் எதையும் தெளிவாக யோசித்து முடிவு பண்ணுங்க.

உங்க பொறுப்பை தட்டிக்கழிக்காதீங்க. வீண்பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும், கணவன் மனைவி இடையை திடீர் பிரச்சினைகள் வாக்குவாதங்கள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க.

பணவரவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக ஆடம்பர செலவு செய்யாதீங்க அப்புறம் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கல் இந்த வாரம் வேண்டாம் பெரிய அளவில் முதலீடுகளும் வேண்டாம் தவிர்த்து விடுங்கள். அடுத்தவங்க விசயத்தில தலையிட வேண்டாம்.

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பட்டுன்னு பேசுவீங்க அதுவே பிரச்சினைகளை தரலாம்.

உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்குள் சனி, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், ஏழாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இருக்கிற வேலையில் கவனமாக வேலை பாருங்க. புது வேலைக்கு எல்லாம் முயற்சி பண்ணாதீங்க.

திடீர் மன உளைச்சல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்க. சண்டை சச்சரவு கார சார விவாதம் வரலாம் கவனமாக இருங்க. குடும்ப உறுப்பினர்களிடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க பேச்சில நிதானமாக இருங்க.

கோபமாக பேசாதீங்க பிரச்சினைகள் அதிகமாகும். என்னடா வாழ்க்கை இது என்று விரக்தியான மனநிலையில் இருப்பீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்க.

பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பயணங்கள் எதுவும் சாதகமாக இருக்காது. திடீர் மருத்துவ செலவு வரும் உணவு விசயத்தில கவனமாக இருங்க.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு,சுக்கிரன், ஆறாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுகிறது. திருமணத்திற்கு வரன் பேசி முடிக்கலாம்.

எந்த ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. வாழ்க்கை துணை உடல் ஆரோக்கியத்திலும் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.

தேவையில்லாத விரைய செலவுகள் வரும். பணம் விசயத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அதை அசால்டாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும் எதிரிகள் தொல்லை நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை கண்டுபிடித்து தீர்ப்பீர்கள்.

மீனம்

எதையும் துணிச்சலோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகும் மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்குள் செவ்வாய், ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு,கேது, ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, நான்காம் வீட்டில் ராகு,சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் வேலையை தக்க வைத்துக்கொள்வதே நல்லது. புதிய வேலை எதுவும் மாற முயற்சி செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசுங்க.

மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

அதன் மூலம் நிம்மதியும் சந்தோஷம் ஏற்படும்.

லாப சனி உங்க வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுப்பார்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும்.

அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க.

தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீங்க. நிதானமாக செயல்படுங்க.

பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக இருங்க.

யாரை நம்பியும் கடன் வாங்கி கொடுக்காதீர்கள்.

விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க.