19 இளைஞர்கள் பொலிசாரால் கைது..

0
8

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக மட்டக்களப்பில், 19 இளைஞர்கள் பொலிசாரால் பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் புலிகளின் பாடல்கள்,சின்னங்களை பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரை பொலிசார் நேற்று தேடித் தேடி கைது செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நான்கு இளைஞர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.